மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்

Nov 23, 2020 08:41 AM 4867

திருச்சி திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பெண்கள் குறித்து இழிவாக பேசிய தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான காடுவெட்டி தியாகராஜன், ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காடுவெட்டி கிராம நிர்வாக அலுவலர் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், அவர் மீது 6 பிரிவுகளுக்கு கீழ் காட்டுப்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், மேலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரின் குடும்ப தகராறில் மத்தியஸ்தம் செய்ய முயன்ற காடுவெட்டி தியாகராஜன், அந்த பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இழிவாக பேசியுள்ளார். தற்போது அந்த ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினால் நியமிக்கபட்ட காடுவெட்டி தியாகராஜனின் இதுபோன்று செயல்கள் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted