திமுகவில் உட்கட்சித்தேர்தல் நடத்தவேண்டும் - அதிருப்தியில் கு.க. செல்வம்?

Aug 05, 2020 08:12 AM 836

திமுகவின் ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் கு.க.செல்வம் மாவட்ட செய்லாளர் பதவி கிடைக்காததால் பா.ஜ.கவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் டெல்லி சென்ற அவர், பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப்பேசினார். அவர் பா.ஜ.கவில் இணைந்ததாக தகவல் வெளியானது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கு.க.செல்வம்,தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசிய கறுப்பர் கூட்டம் நிர்வாகிகளை ஸ்டாலின் வெளிப்படையாக கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக இணைவதற்காக டெல்லிக்கு வரவில்லை என்றும், தொகுதி மேம்பாட்டுக்காக தலைவர்களை சந்தித்ததாகவும் விளக்கம் அளித்தார். 

Comment

Successfully posted