தபால் வாக்குகள் குறித்து விஷால் கூறிய கருத்தால் சர்ச்சை

Jun 16, 2019 10:06 PM 106

நடிகர் சங்க தேர்தலில் ஆயிரத்து நூறு தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாக விஷால் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான நீதிபதி பத்மநாபனிடம், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்யராஜ் அணியினர் புகார் அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே விஷால் தனது பொதுச்செயலாளர் பதவியை இழந்து விட்டதாகவும், காவல்துறை ஆணையரை சந்தித்து பாதுகாப்பு கேட்பது எந்த வகையில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பினார்.

Comment

Successfully posted