கொரோனா தடுப்பூசி -அதிமுக சிறப்பு கவன ஈரப்பு தீர்மானம்

Sep 06, 2021 12:21 PM 897

கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கொண்டுவந்துள்ளனர்.

கவன ஈரப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், கொரோனாவுக்கு எதிரான கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் பயன் ஓராண்டு மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் போட தேவையான நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் தொடங்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க தமிழக அரசு முன் வருமா? என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த துறைஅமைச்சர், மூன்றாம் டோஸ் போடும் பணிகள் தொடங்கப்பட்டால் அது தமிழகத்திலும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

 

Comment

Successfully posted