கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி : விலை ரூ.1000-ஐ விட குறைவு - இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

Jul 23, 2020 08:03 AM 652

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி வரும் டிசம்பர் மாதத்துக்குள் தயாராகிவிடும் எனவும், அதன் விலை ஆயிரம் ரூபாயாகவும் இருக்கும் எனவும், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, கொரானா தொற்றுக்கான தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு புனேயைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்தது. மேலும், கொரோனா தடுப்பூசியின் விலை ஆயிரம் ரூபாய்க்கும் சற்று குறைவாகவே இருக்கும் எனவும், வரும் டிசம்பருக்குள் தடுப்பூசி தயாராகிவிடும் என்றும் சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். தடுப்பூசியை பாதுகாப்பானதாகவும், நல்ல செயல்திறன் கொண்டதாகவும், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், தடுப்பூசியின் அவசரம் கருதி பிற தயாரிப்பு பணிகளை நிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted