தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

Mar 28, 2020 08:34 AM 1976

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் சேலத்தை சேர்ந்த ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் 3 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் சேலத்தை சேர்ந்த 61 வயது நபர் இந்தோனேசியாவிலிருந்து மதப்பிரச்சாரத்திற்காக இந்தியாவிற்கு வந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர் தற்போது சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா தொற்றுக்குள்ளான 73 வயது மூதாட்டி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், 39 வயதான நபர் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேரின் உடல் நிலையும் சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Comment

Successfully posted