தமிழகத்தில் மேலும் 4,807 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Jul 18, 2020 08:10 PM 1215

தமிழ்நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 4 ஆயிரத்து 807 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 907 பேர் ஆண்கள் என்றும் ஆயிரத்து 900 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 49 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 856 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குணமடைந்தோர் சதவீதம் 68 புள்ளி 7 சதவீதமாக உள்ளது.

சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி, திருவள்ளூரில் 370 பேரும், செங்கல்பட்டுவில் 323 பேரும், வேலூரில் 191 பேரும், மதுரையில் 185 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 88 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 403-ஆக உயர்ந்துள்ளது.

Comment

Successfully posted