பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்: முதலமைச்சர்

Mar 26, 2020 08:43 AM 1386

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனா வைரசை எளிதாக விரட்டலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பழனிசாமி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அரசு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே நோயிலிருந்து வெளியே வர முடியும் என்று குறிப்பிட்ட அவர், நோயின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.

Comment

Successfully posted