தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

Jul 08, 2020 10:24 PM 478

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 350-ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 3 ஆயிரத்து 756 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 2 ஆயிரத்து 292 பேர் ஆண்கள் என்றும், ஆயிரத்து 464 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 ஆயிரத்து 51 பேர் குணமடைந்துள்ளதால், மீண்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 480 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 60 சதவீதத்தை கடந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் 379 பேரும், திருவள்ளூரில் 300 பேரும், செங்கல்பட்டில் 273 பேரும், வேலூரில் 160 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted