ஈரோட்டிற்கு வந்த தாய்லாந்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி

Mar 23, 2020 04:22 PM 935

ஈரோட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த பகுதிகளில் உள்ள கடைகளை, வரும் 31ஆம் தேதி வரை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஈரோட்டிற்கு வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனோ பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் வழிபாடு நடத்திய பள்ளிவாசலில் மற்றவர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பாதித்தவர்கள் சென்று வந்த 5 வீதிகளில் உள்ள கடைகளையும் வரும் 31ஆம் தேதி வரை மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த பகுதிகளில் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted