தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் உண்மை நிலையை அம்பலபடுத்திய, கதறி அழும் பெண்ணின் வீடியோ

May 10, 2021 08:38 PM 2552

சென்னை ஆவடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் தனது தாயை காப்பாற்ற கூறி கதறி அழும் பெண்ணின் வீடியோ தமிழ்நாட்டின் உண்மை நிலையை அம்பலபடுத்தியுள்ளது.

கொரோனா 2 வது அலை தமிழகத்தில் எல்லை மீறியுள்ள நிலையில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் என அனைத்திற்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

உயிருக்கும் போராடும் நிலையில் மருத்துவமனையில் இடமில்லாமல் பலர் ஆம்புலன்ஸ்களிலேயே உயிர் விடுகின்றனர்.

இந்நிலையில் ஆவடியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள போதும் அவருக்கு மருத்துவமனையில் இடம் இல்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

தயவு செய்து யாரும் வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களிடம் அழுத படி கோரிக்கை வைக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

Comment

Successfully posted