கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று!!

Aug 03, 2020 08:54 AM 751

கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுதொடர்பாக எடியூரப்பா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தம்முடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கடந்த வாரம் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில், தற்போது எடியூரப்பாவிற்கும் நோய் தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted