சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது!!

Aug 04, 2020 12:40 PM 960

சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதையடுத்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கு கீழே குறைந்துள்ளது. அதிகபட்சமாக மணலி மண்டலத்தில் 92 சதவீதம் பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 91 சதவீதம் பேரும், ராயபுரம் மண்டலத்தில் 90 சதவீதம் பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 89 சதவீதம் பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 87 சதவீதம் பேரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதேபோல், கோடம்பாக்கத்தில் 87 சதவீதமும், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தலா 86 சதவீதமும், திருவொற்றியூர் மற்றும் அடையாறில் 84 சதவீதம் பேரும், வளசரவாக்கத்தில் 83 சதவீதம் பேரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக, பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted