பிற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Apr 10, 2020 02:14 PM 1929

பிற நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் 6 ஆயிரத்து 412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பென்னெட் பல்கலைக்கழகம் நடத்திய கொரோனா குறித்த சர்வதேச கருத்தரங்கில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதித்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும், 10 லட்சம் பேரில் 3.8 பேர்தான் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக விளக்கமளித்தார். கொரோனா பாதிப்பு நான்கு, ஐந்து தினங்களாக இருமடங்காகி வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுவதாக அவர் தெரிவித்தார். இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியே கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக உள்ளதாகக் கூறினார். கொரோனா சோதனைக்கு மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளாமல், தைரியமாக தாமாகவே முன்வந்து ஒத்துழைக்கவேண்டும் எனவும் ஹர்ஷ் வர்தன் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted