சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார்

Apr 15, 2021 09:22 PM 1260

சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மொத்தம் 14 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 4 ஆயிரத்து 500 படுக்கை வசதிகளும், அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆயிரத்து 500 படுக்கை வசதிகளும், சென்னை பல்கலை கழகத்தில் 900 படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. இதேபோல், சென்னை ஐ.ஐ.டியில் 820 படுக்கை வசதிகளுடனும், செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 700 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, ஜவறர் பொறியியல் கல்லூரி உள்பட மொத்தம் 14 இடங்களில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted