மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா..! "வெளுக்கிறது திமுகவின் சாயம்"

Jan 21, 2022 06:39 PM 5295

நாளுக்கு நாள் கொரானா தொற்று உச்சமடைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே கொரானா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் ஏன் முன்னணியில் இருக்கிறது? இதற்கு யார் பொறுப்பு?  

ஜனவரி 2021 ல் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் தற்போது 2022 ஜனவரியில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும், திமுக அரசு கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் எந்தளவிற்கு அசமந்தமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று...

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிகபட்சமாக 500 க்கும் குறைவான அளவாகவே கொரானா தொற்று எண்ணிக்கை பதிவாகி இருந்தது. உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தலைமையிலான நிபுணர்கள் குழுவை அமைத்து மிகத்தீவிரமான கொரோனா தொற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டது அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு.

அதன் காரணமாகவே கொரானா தொற்று கட்டுக்குள் இருந்தது.ஆனால், கடந்த மே மாதம் திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் குதூகலமடைந்த கொரோனா தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்தது.

image

அதன் விளைவுதான் கடந்த மே மாதம் ஒருநாள் தொற்று 35 ஆயிரத்தை தாண்டி பதிவானது. எப்படியோ தட்டுத்தடுமாறி தானாகவே கட்டுக்குள் வந்த கொரோனா மீண்டும் தற்போது தன் கோரமுகத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதத்திலேயே கொரோனா உச்சமடையும் என்று மருத்துவத்துறை நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்கியும்கூட, நிர்வாகத் திறமையின்மையால் தள்ளாடும் திமுக அரசு எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

விளைவு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்த கொரோனா பாதிப்பு தற்போது நாளொன்றுக்கு 28 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாக ஆரம்பித்திருக்கிறது.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், இன்னும் சில நாட்களில் இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். கொரோனா மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சரே வாக்குமூலம் கொடுத்திருப்பதே திமுகவின் தில்லாலங்கடிகளுக்கு ஓர் சான்று..!

இப்போதும் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல் பிடித்துவைத்த கொழுக்கட்டைபோல அசைவற்றுக்கிடக்கும் திமுக இனியாவது ஏதாவது செய்யுமா? இல்லை கொத்துக்கொத்தாக மக்களை கொரானாவுக்கு வாரிக்கொடுக்குமா? என்ற அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர் தமிழக மக்கள்...

நியூஸ் ஜெ செய்திகளுக்காக மனோஜ்குமார் கோபாலன்...

Comment

Successfully posted