மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை!

Jan 10, 2021 12:44 PM 5114

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையையொட்டி, வருகிற 14ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று நடந்த நிலையில், அனுமதி சீட்டு வழங்கப்பட்ட 430 மாடுபிடி வீரர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

image

பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று சான்றிதழ் வழங்கப்படும் வீரர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். இதேபோல், காளை உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நாளை நடத்தப்படுகிறது.

 

Comment

Successfully posted