தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது!

Mar 01, 2021 01:00 PM 859

தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனையில், முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களும் மருத்துவ சான்றிதழ்களுடன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comment

Successfully posted