ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி திட்டம்!

Jan 10, 2021 12:37 PM 12882

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து, ஏற்கனவே இரண்டு முறை ஒத்திகை பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி தொடர்பாக, நாளை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 16ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted