18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!

Apr 19, 2021 09:28 PM 989

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பணிகளின் மூன்றாம் கட்டமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில், 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted