8-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

Jan 06, 2021 01:03 PM 1119

அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து சேமிப்பு கிடங்கில், அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன், சென்னையில் உள்ள மத்திய அரசின் மருந்து சேமிப்பு கிடங்கில், 2 கோடி தடுப்பூசிகள் பதப்படுத்தப்படும் என்றார். கொரோனா தடுப்பூசி செலுத்த ஏதுவாக 33 லட்சம் ஊசிகள் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். முதற்கட்டமாக 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், ஒரு மையத்தில் நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Comment

Successfully posted