தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

Jul 27, 2021 11:06 AM 1776

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தென்காசி, அரியலூர், கிருஷ்ணகிரி, தஞ்சை, நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில், தினசரி கொரோனா பாதிப்பு, ஞாயிற்றுக் கிழமையை விட சற்று அதிகரித்து காணப்பட்டது.

இதில், தென்காசி, தஞ்சை, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும், தொடர்ந்து மூன்றாவது நாளாக தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில், தினசரி பாதிப்பு 100ஐ கடந்து காணப்பட்டது.

கோவையில் அதிகபட்சமாக 164 பேருக்கும், ஈரோட்டில் 127 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Comment

Successfully posted