இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சம்..

Apr 07, 2021 12:51 PM 502

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 15 ஆயிரம் என்ற புதிய உச்சமாத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்து ஆயிரத்து 785 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 630 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8 லட்சத்து 43 ஆயிரத்து 473 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், இதுவரை 8 கோடியே 70 லட்சத்து 77 ஆயிரத்து 474 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


 

Comment

Successfully posted