சென்னை மக்களின் ஒத்துழைப்பு காரணமாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவது நம்பிக்கை அளிக்கிறது!!- அமைச்சர் உதயகுமார்

Jul 08, 2020 11:53 AM 384

சென்னை மக்களின் ஒத்துழைப்பு காரணமாக கொரோனா பாதிப்பு குறைவதுடன், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது நம்பிக்கை அளிப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்காக மண்டல கட்டுப்பாட்டு மையத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மக்களின் ஒத்துழைப்பு காரணமாக குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்தும், தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பது நம்பிக்கையை கொடுத்திருப்பதாக கூறினார். இதேபோல், அனைத்து பகுதிகளிலும் மக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted