கொரோனா வைரஸ் பாதிப்பு : பலி எண்ணிக்கை 2,236 ஆக அதிகரிப்பு

Feb 21, 2020 10:06 AM 284

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2, 236ஆக அதிகரித்துள்ளது.ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது. நேற்று ஹூபேய் நகரில் 115 பேரும், வூகான் நகரில் 99 பேரும் உயிரிழந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 889 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இதுவரை 75 ஆயிரத்து 465 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted