தமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று!!

May 31, 2020 07:14 AM 762

தமிழகத்தில் புதிதாக 856 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 82 பேர் மகாராஷ்ட்ரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 599 பேர் ஆண்கள் மற்றும் 338 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதுஅதிகபட்சமாக சென்னையில் 616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேரும், சேலத்தில் 37 பேரும், திருவள்ளூரில் 28 பேரும், காஞ்சிபுரத்தில் 22 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் 13 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 687 பேர் குணமடைந்த நிலையில், மீண்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 56 புள்ளி 6 சதவீதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. 9 ஆயிரத்து 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comment

Successfully posted