சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது!

May 23, 2020 03:56 PM 755

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்...

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 768 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில், ஆயிரத்து 300 பேரும், திரு.வி.க. நகரில் ஆயிரத்து 79 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரம் பேரும், தண்டையார்பேட்டையில் 881 பேரும், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அண்ணாநகரில் 783 பேரும், வளசரவாக்கத்தில் 650 பேரும், அடையாறில் 513 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் 402 பேருக்கும், திருவொற்றியூரில் 250 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted