சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; நேற்று ஒரே நாளில் 116 பேர் பலி

Feb 14, 2020 08:17 AM 418

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்தனர்.

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் நேற்று ஒரே நாளில், கொரோனா வைரசுக்கு 116 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Comment

Successfully posted