தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சமூக பரவலாக மாறவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்

Jun 28, 2020 07:21 PM 725

தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். புதுகோட்டை பழைய அரசு மருத்துவமனையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்ட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கொரோனா பரவலை வல்லரசு நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், தமிழக அரசு அனைத்து சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தி வருவதாக தெரிவித்தார். சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசு தான் கூற வேண்டும் எனக் கூறிய அமைச்சர், தமிகழத்தில் இதுவரை சமூக பரவல் ஏற்படவில்லை என விளக்கம் அளித்தார்.

Comment

Successfully posted