திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி!

Jun 28, 2020 07:28 PM 807

செஞ்சி திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான், திமுகவின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து ஒட்டம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் இல்லம் அமைந்துள்ள தேசூர்பாட்டை சாலையை பேரூராட்சி அதிகாரிகள் தடுப்புகள் அமைத்து மூடியதுடன், கிருமி நாசினியும் தெளித்தனர்.

Comment

Successfully posted