காதல் வலை விரித்து சர்ச்சையில் சிக்கிய மாநகராட்சி உதவி பொறியாளர்!

Jul 08, 2020 03:58 PM 347

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளரிடம் மாநகராட்சி உதவி பொறியாளர் ஒருவர் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசும் ஆடியோ வெளியான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வீடுகள் தோறும் கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தன்னார்வலர்களாக மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதுபோன்ற ஒரு மாணவியிடம் மாநகராட்சி உதவி பொறியாளராக உள்ள கமலக்கண்னன் என்பவர் காதல் வலை விரித்து தற்போது வம்பில் மாட்டிக்கொண்டார். உதவி பொறியாளர் பணி உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு இணையாணது என்றும் தாம் 78 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவதாகவும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவர் மாணவியிடம் அத்துமீறிய ஆடியோ பதிவை தற்போது கேட்கலாம்.

Comment

Successfully posted