மகாராஷ்டிர அமைச்சர் மீதான ஊழல் வழக்கு: இன்று விசாரணை

Apr 08, 2021 09:02 AM 392

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் மீதான ஊழல் வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. அனில் தேஷ்முக்கிற்கு எதிரான ஊழல் புகார்களை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அனில் தேஷ்முக்குக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள ஊழல் புகார்கள் குறித்த முதல்கட்ட விசாரணையை நடத்தி, 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Comment

Successfully posted