ஒட்டஞ்சத்திரத்தில் போதிய மழை பொழியாததால் பருத்தி விளைச்சல் கடும் பாதிப்பு

Feb 21, 2019 02:51 PM 80

போதிய மழை பொழியாததால் பருத்தி விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டஞ்சத்திரத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீரனூர், மண்டவாடி, கள்ளிமந்தையம், உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு போதிய மழை பொழியாததால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் வற்றியது. இதனால், பருத்திச் செடிகளை சரிவர பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அறுவடைக்கு தயாராக இருந்த பருத்தி, பூவும் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஏக்கருக்கு 20 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்ததாக தெரிவித்துள்ள விவசாயிகள், இதனை ஈடுகட்ட அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted