பழனி முருகன் கோயிலில் 15 நாட்களில் ரூ.2.5 கோடி காணிக்கை

Mar 14, 2019 06:43 AM 192

பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 5 லட்சத்து 34 ஆயிரத்து 90 ரூபாய் கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை எண்ணப்படுகின்றன. தற்போது உண்டியல்கள் நிறைந்ததை அடுத்து திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரொக்கமாக 2 கோடியே 5 லட்சத்து 34 ஆயிரத்து 90 ரூபாயும், தங்கம், வெள்ளி, பித்தளை, உள்ளிட்ட பொருட்களும் காணிக்கையாக கிடைத்துள்ளன. இதில் ஆயிரத்து நானூற்று பன்னிரெண்டு வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்தன.இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

Comment

Successfully posted