வேலூர் மக்களவை தேர்தலுக்கு நாளை வாக்கு எண்ணிக்கை

Aug 08, 2019 03:03 PM 313

வேலூரில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு எண்ணிக்கையின் முன்னணி நிலவரங்கள் காலை 11 மணி முதலே வெளியாகும் என தெரிவித்தார். முதலில் தபால் வாக்குக்கள் எண்ணப்படும் என்று கூறிய அவர், சட்டமன்ற தொகுதிக்கு 5 ஒப்புகைசீட்டு இயந்திரம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கடைசியில் எண்ணப்படும் என்று கூறினார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 73 மாநில காவலர்கள் மற்றும் 100 துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்தார்.

Comment

Successfully posted