உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமின் மறுப்பு

Oct 09, 2019 05:14 PM 124

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க தேனி குற்றவியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து, உதித் சூர்யாவும் அவரது தந்தை வெங்கடேசனும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜாமின் கேட்டு, உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரது ஜாமின் வழங்க மறுத்து விட்டது.

Comment

Successfully posted