மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்: நிர்மலா தேவி உட்பட மூவரையும் விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

Dec 04, 2018 07:25 PM 183

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர் தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மூவரும் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றம், மூவரையும் விடுவிக்க மறுத்ததுடன், மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Comment

Successfully posted