டிச.12 ஆம் தேதி கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பு இல்லை - ரஜினி திட்டவட்டம்

Oct 20, 2018 01:17 PM 571

நடிகர் ரஜினிகாந்த் "பேட்ட" திரைப்படத்தின் சூட்டிங்கை முடித்துக்கொண்டு வாராணாசியில் இருந்து சென்னை விமான நிலையம் திரும்பினார். அப்போது, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது.

"பேட்ட" திரைப்படம் 'கபாலி', 'காலா' போன்ற சமூகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இல்லை. அது ஒரு முழுநேர பொழுதுபோக்கு கொண்ட படமாக இருக்கும்.

டிசம்பர் 12-ம் தேதி கட்சி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாது. கட்சி தொடங்குவதற்கான 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டது. நேரம், காலம் பார்த்து அறிவிப்பேன் என குறிப்பிட்டார்.

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், அதேநேரத்தில் ஒவ்வொரு கோவிலுக்கும் ஐதீகம் உண்டு. அதில் நீதிமன்றம் தலையிட கூடாது என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

மேலும், "மீ டூ" இயக்கத்தை பொறுத்தவரையில் பெண்களுக்கு ஆதரவானது தான். ஆனால் பெண்கள் அதனை தவறாக பயன்படுத்த கூடாது என தெரிவித்தார்.

Comment

Successfully posted