தற்கொலை செய்வதாய் நாடகமாடிய பெண்ணுக்கு நீதிமன்றம் விநோத தீர்ப்பு

Jul 10, 2019 12:27 PM 102

தற்கொலை செய்வதாக நாடகமாடிய பெண்ணுக்கு விநோதமான தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைக்குடியை அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கார்த்திகா என்ற பெண் கடந்த மாதம், தற்கொலை செய்து கொள்வதாக, விஷம் குடிக்கும் காணொலியை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. அந்தப் பெண்ணை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் குடித்தது சோப் ஆயில் என்பது தெரியவந்தது.

இந்தநிலையில், மாநில சட்டப் பணிகள் குழு தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உயிரின் மதிப்பு தெரியாமல் விளையாடி, பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கார்த்திகா உள்ளிட்டோரை கண்டித்தார். ஜூலை 10 ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை, தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுபவர்களுக்கு கார்த்திகா மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

 

Comment

Successfully posted