ஸ்டாலினின் வருகையையொட்டி அவசரகதியில் சாலை சீரமைப்பு பணி-மக்கள் அதிருப்தி

Nov 22, 2021 06:16 PM 1445

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலை குண்டும் குழியுமாக உள்ள நிலையில், ஸ்டாலினின் கோவை வருகையொட்டி முதல்வர் வரும் வழித்தடங்கள் மட்டும் ஒரேநாளில் சீரமைக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

image

கோவை மற்றும் திருப்பூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக கோவை வந்த ஸ்டாலின், கோவையிலிருந்து அவினாசி சாலை வழியாக வஞ்சிபாளையம் அரசு கல்லூரிக்கு சென்றார். இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

image

ஸ்டாலின் வருகையொட்டி அவர் பயணிக்கும் வழிதடத்தில் உள்ள சாலைகள் மட்டும் போர்கால அடிப்படையில் இரவு பகலாக சீரமைக்கப்பட்டது. குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், முதல்வர் வருகையையொட்டி அவசரகதியில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்றது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Comment

Successfully posted