சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்

May 09, 2021 09:51 PM 489

இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

தமிழகம் முழுவதும் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், சென்னையில் முழு ஊரடங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக 10 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தபட உள்ளனர்.

அதே போல், சுமார் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடுமையான அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted