கிரிக்கெட் - வலுவான நிலையில் இந்திய அணி

Oct 14, 2018 07:46 AM 805

 

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, ஐதராபாத்தில் 2 வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய அணி, 311 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாட தொடங்கிய இந்திய அணியில், ராகுல் 4 ரன்களிலும்,ப்ரித்வி ஷா 70 ரன்களிலும், புஜாரா 10 ரன்களிலும், கேப்டன் கோலி 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரகானேவுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவித்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்து இருந்தது. ரகானே 75 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 85 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Comment

Successfully posted

Super User

super


Super User

good


Super User

செய்திகள் உடன் வருவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது