சென்னையில் நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி

Feb 23, 2020 02:50 PM 207

குழந்தைகளின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வந்த 24 பேர், இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவுதுணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுப்பது குறித்த   விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றப்பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி,பிப்ரவரி 24 ம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து,   குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted