சாத்தான்குளம் விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிககப்படவேண்டும் - ரஜினி!

Jul 01, 2020 08:08 PM 994

சாத்தான் குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சாத்தான் குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்த விவகாரத்தில், தற்போது சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Comment

Successfully posted