பெல்காம் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய வீட்டின் கூரை மீது படுத்துக் கிடந்த முதலை

Aug 12, 2019 04:02 PM 108

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை ஒருவீட்டின் கூரை மீது ஏறிக்கிடக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் கிருஷ்ணா ஆற்றிலும் அதன் துணையாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெல்காம் மாவட்டத்தில் ஆற்றங்கரையோர ஊர்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட முதலை ஒன்று தண்ணீரில் மூழ்கிக் கிடக்கும் வீட்டின் கூரைமீது படுத்துக் கிடந்தது. அந்தக் காட்சி இணையத் தளங்களில் பரவி வருகிறது.

Comment

Successfully posted