சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Dec 05, 2021 03:36 PM 2538

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், நேற்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 354 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்,படி பூஜைக்கான முன்பதிவு வரும் 2040ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில், இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த 16ம் தேதி முதல் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்கள், தினசரி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தரிசனத்திற்காக முன்பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் 'ஸ்பாட் புக்கிங்' மையங்கள் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் மட்டும் 42 ஆயிரத்து 354 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இதையடுத்து, வரும் 9 ஆம் தேதி முதல், மகரவிளக்கு தினமான அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை 'வெர்ச்சுவல் க்யூ' மூலம், தினசரி முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை, 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக அதிகரிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

இதேபோல், 'ஸ்பாட் புக்கிங்' முன்பதிவு மூலம் தினசரி 5 ஆயிரம் பக்தர்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் படி பூஜைக்கான முன்பதிவு வரும் 2040ஆம் ஆண்டு வரை முடிந்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. முன்பதிவு செய்த பக்தர்கள் நாளொன்றுக்கு 45 ஆயிரம் பேர் தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் சன்னிதானத்தில் பிரசித்தி பெற்ற படிப்பூஜை தினசரி அங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த ஐயப்ப பக்தர்கள் படி பூஜையில் பங்கேற்று ஐயப்பனை தரிசித்தனர்.Comment

Successfully posted