ஊரடங்கில் ஏப். 20 முதல் வழங்கப்படும் சில விலக்குகள் - மத்திய அரசு

Apr 15, 2020 09:27 AM 442

ஏப்ரல் 20 முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக சில கட்டுப்பாடுகளுடன் வழங்க உள்ள விலக்கு குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது.  கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நேற்று, பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டு மக்கள் இதுவரை கடைபிடித்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும், எத்தகைய சூழ்நிலையிலும் கொரோனா வைரஸை நாம் கட்டுப்படுத்தியே தீர வேண்டும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். ஏப்ரல் 20 வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு மிகக் கடுமையாக பின்பற்றப்படும் என தெரிவித்தார். ஏழை மக்களின் நலன் கருதி கட்டுப்பாடுகளுடன் கூடிய சில தளர்வுகள் வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறினார். ஏப்ரல் 20 முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக சில கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்படும் என்றும், கட்டுப்பாடுகளை மீறினால் விலக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் என்றும் குறிப்பிட்டார். விலக்குகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று வெளியிடப்படும் என்றும் கூறினார். அதன் படி, அறிக்கையை இன்று மத்திய அரசு வெளியிடுகிறது.

Comment

Successfully posted