இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்!

Jan 05, 2021 07:08 AM 2193

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரான்ஸை பின்னுக்கு தள்ளிய பிரிட்டன், தற்போது 5-வது இடத்தில் உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 58 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும், வீட்டை விட்டு வெளியே வரலாம் எனவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நாளை முதல் ஆன்லைனில் பாடம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted