மேற்கு வங்கத்தை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் ஊரடங்கு நீட்டிப்பு!!

Jun 27, 2020 07:43 AM 395

மேற்கு வங்க மாநிலத்தை தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும், ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இந்நிலையில், மேற்குவங்கத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அங்கு கொரோனா வைரசால் இரண்டாயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted