நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் காய்கறி, மளிகை கடைகளில் மக்களுக்கு கட்டுப்பாடு!

Mar 25, 2020 05:22 PM 1393

நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் சமூக இடைவெளி வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த கடைகளில் சமூக இடைவெளி வழிகாட்டு நெறிமுறை பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகளில் பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில், பிரத்யேகமாக குறியீடுகள் வரையப்பட்டுள்ளன.

Comment

Successfully posted